உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலம் உயரமாகவும் ரோடு தாழ்வாகவும் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் போடி நகராட்சி 18 வது வார்டு வ.உ.சி., நகர் குடியிருப்போர் அவதி

பாலம் உயரமாகவும் ரோடு தாழ்வாகவும் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் போடி நகராட்சி 18 வது வார்டு வ.உ.சி., நகர் குடியிருப்போர் அவதி

போடி, : போடி நகராட்சி 18 வது வார்டு வ.உ.சி., நகர் நடுத்தெருவில் சாக்கடை வடிகால் வசதி இன்றி வீடுகளுக்கு முன் கழிவு நீர் குளம் போல் தேங்குவதால் மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர்.போடி நகராட்சி 18 வது வார்டில் இஸ்ரேல் சந்து, சர்ச்தெரு, வ.உ.சி., நகர் நடுத்தெரு, வடக்குத்தெரு, தெரு எண் 1, வேதமுத்து சந்து, தியாகி விஸ்வநாதன் தெரு. செபஸ்தியார் கோயில் தெரு, காளியம்மன் கோயில் தெற்கு சந்து உள்ளிட்ட தெருக்களில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் முறையாக இல்லததால் சுகாதார சீர்கேட்டில் மக்கள் தவிக்கின்றனர். வ.உ.சி., நகர் நிர்வாகிகள், குடியிருப்போர் முத்துமணி, சொக்கையா, கிருஷ்ணசாமி, கருப்பையா, கோவிந்தராஜ் ஆகியோர் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது:சாக்கடை தரைப்பாலம் சீரமைக்க வேண்டும்வ.உ.சி., நகர் நடுத்தெருவில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஒட்டி ரோடுக்கான பாதை இருந்தும் தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. சாக்கடை தரைப்பாலம் அமைத்தும் எளிதாக பயன்படுத்த முடியவில்லை. பாலம் உயரமாகவும், ரோடு பள்ளமாக உள்ளது. இதனால் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. பாதாள சாக்கடை மூடி வெளியே தெரியாத வகையில் பள்ளமாக உள்ளது. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்குகிறது. இந்தபள்ளம் தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். 3 வது தெரு, கருப்பணன் தெரு, இஸ்ரேல் சந்தில் ரோடு சீரமைப்பு பணி கிடப்பில் உள்ளன. நடுத்தெரு மெயின் ரோட்டில் பெரிய மரம் விழும் நிலையில் சாய்ந்து உள்ளது. வ.உ.சி., நகர் முதல் தெருவில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. வ.உ.சி., நகர் நடுத்தெரு கிழக்கு பக்கம் கழிவுநீர் செல்ல முறையாக வடிகால் வசதி இல்லாததால் பாலிதீன் குப்பை கழிவுகளுடன் கழிவு நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் விஷப் பூச்சிகள் வீட்டிற்குள் வரும் அவல நிலை உள்ளது. பாதாள சாக்கடை இணைப்புகள் கொடுக்கப்பட்டும் முறையாக செயல் படாததால் கழிவுநீர் வெளியேறி வருகிறது.பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்சர்ச் தெரு அருகே தியாகி விஸ்வநாதன் தெருவில் சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப் படாமல் கதவுகள் சேதடைந்து மின் வசதி இன்றி உள்ளது. மின்மோட்டார் பழுது அடைந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் மக்கள் செல்ல தயக்கம் காட்டி வருவதோடு, பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர். தெருவில் மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ளதால் பாம்பு, விஷப் பூச்சிகள் தெருக்களில் உலா வருகிறது. இதனால் இரவில் பெண்கள் வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர்.வீடுகளுக்கு பட்டா இன்றி தவிப்பு சர்ச் தெரு- தியாகி விஸ்வநாதன் தெரு கிழக்கு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 32 குடும்பங்களுக்கு இது வரை பட்டா வழங்கவில்லை. இதனால் குடிநீர், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி பெற முடியாமல் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பட்டா கேட்டு மக்கள் தொடர் முயற்சி செய்தும் நடவடிக்கை இல்லை. சாக்கடை தரைப் பாலம், சுகாதார வளாகம் சீரமைப்பதோடு, வீடுகளுக்கு அருகே குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்றி மாற்று பாதையில் விடவும், வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும், தியாகி விஸ்வநாதன் தெருவில் மின் வசதி ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ