உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோஷ்டி பூசலால் தேனி நகராட்சியில் ஏலம் 2வது முறையாக ஒத்திவைப்பு நிர்வாகத்திற்கு வருவாய் பாதிப்பு

கோஷ்டி பூசலால் தேனி நகராட்சியில் ஏலம் 2வது முறையாக ஒத்திவைப்பு நிர்வாகத்திற்கு வருவாய் பாதிப்பு

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் இடையே நிலவும் கோஷ்டி பூசலால் 2வது முறையாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.தேனி நகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த ரேணுப்பிரியா தலைவராக உள்ளார். இவருக்கும் தி.மு.க.,வை சேர்ந்த துணைத்தலைவர் செல்லம், இவரது ஆதரவு கவுன்சிலர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கோஷ்டி பூசல் நிலவி வருகிறது.இதனால் நகராட்சி வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன.இந்நிலையில் நகராட்சி புது பஸ் ஸ்டாண்டில் உள்ள டூவீலர் ஸ்டாண்டுகள், பூ, முருக்கு விற்பனை செய்தல், 3 இடங்களில் கட்டண கழிப்பறை வசூல் உரிமம், மேற்கு சந்தையில் ஆடு அடிக்கும் தொட்டி உள்ளிட்டவற்றிற்கு ரூ.33லட்சத்திற்கு ஜன.,30ல் ஏலம் விட ஏற்பாடுகள் நடந்தன.ஆனால் அன்று நிர்வாக காரணங்களால் ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதன்பின் நேற்று ஏலம் நடக்க இருப்பதாக நகராட்சி அறிவித்தது. இதனால் ஒப்பந்ததாரர்கள் பலர் ஏலம் எடுக்க பல லட்ச ரூபாய் டிராப்ட் உடன் விண்ணப்பித்தனர். ஆனால் நேற்று காலை திடீரென ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றத்துடன் டிராப்ட் யை திரும்ப பெற்றனர்.ஏலம் ஒத்திவைப்பு தொடர்பாக நகராட்சி தலைவர், கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது பதிலளிக்காமல் தவிர்த்தனர்.தற்போது நகராட்சியில் சுகாதார பணியாளர்கள் சிலரை டூவீலர் ஸ்டாண்டுகள், கட்டண கழிப்பறைகளில் வசூல் செய்ய நியமித்து வசூலிக்கின்றனர். இதில் குறைந்தளவே வசூலிப்பதால் நகராட்சிக்கு தினமும் இழப்பு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரப்பணிகள் பாதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை