உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  லஞ்சம்: வணிகவரி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

 லஞ்சம்: வணிகவரி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி: தேனி மாவட்டம் போடியில் ஏல விற்பனை உரிமம் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற மதுரை மண்டல வணிக வரித்துறை உதவி ஆய்வாளர் செல்லையாவுக்கு 59, மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. போடி சுப்புராஜ் நகர் ஜெயராஜ் 63. ஏலக்காய் வியாபாரி. இவர் 2013ல் ஏல உரிமம் பெறுவதற்காக போடி வணிகவரித் துறையில் விண்ணப்பித்தார். அங்கு வணிகவரித்துறை உதவி ஆய்வாளர் செல்லையா, ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதனை வழங்கவிரும்பாத ஏல வியாபாரி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வியாபாரியிடம் வழங்கினர். அதனை செல்லையாவிடம் வழங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறைபோலீசார் பிடித்து கைது செய்தனர். பின் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மீண்டும் இந்த வழக்கில் ஜாமின் பெற்ற செல்லையா தற்போது மதுரை மண்டல வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நேற்று விசாரணை முடிந்தது. செல்லையாவுக்கு, மூன்றாண்டுகள் சிறை, 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ