உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வேன் மீது கார் மோதி விபத்து ஆந்திர பக்தர்கள் மூவர் காயம்

 வேன் மீது கார் மோதி விபத்து ஆந்திர பக்தர்கள் மூவர் காயம்

பெரியகுளம்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்பபக்தர்கள் சென்ற கார், வேன் மீது மோதியதில் காரில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் உட்பட மூவர் காயம் அடைந்தனர். சேலம் சங்கர் நகரைச் சேர்ந்த வேன் டிரைவர் மணிவண்ணன் 41. ஐயப்பபக்தர்கள் 12 பேருடன் நேற்று முன்தினம் சபரிமலைக்கு, திண்டுக்கல் குமுளி பைபாஸ் ரோடு, பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி விலக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். எதிரே சபரிமலைக்கு சென்று விட்டு ஆந்திரா நோக்கி சென்ற கார் டிரைவர் கில்லாரி வெங்கடேஷ் ரமேஷ் 39. துாக்க கலக்கத்தில் ரோட்டில் தடம் மாறி எதிரே வந்த வேன் மீது மோதினார். இதில் கார் நொறுங்கி சேதம் அடைந்தது. அந்த காரில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் சுரேஷ் 53. சந்திரசேகரை 30. தீயணைப்பு படை மீட்பு வீரர்கள் காரை வெட்டி மீட்டனர். கார் டிரைவர் கில்லாரி வெங்கடேஷ் ரமேஷிற்கு காயம் ஏற்பட்டது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். தென்கரை போலீசார் கில்லாரி வெங்கடேஷ் ரமேஷிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி