உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடும்ப தகராறில் மாமனார் உட்பட 5 பேர் மீது வழக்கு

குடும்ப தகராறில் மாமனார் உட்பட 5 பேர் மீது வழக்கு

போடி : திருப்பூர் அருகே பிச்சம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ் 26. இவருக்கும் போடி அருகே அணைக்கரைப்பட்டியில் வசிக்கும் பரமசிவம் மகளுக்கும் ஒன்றை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்க நாகராஜ், இவரது தந்தை மோகன், தாயார் மகாதேவி அணைக்கரைப்பட்டிக்கு வந்துள்ளனர். மனைவிக்கு தான் போட்ட நகைகளை எங்கே என நாகராஜ் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் மாமனார் பரமசிவம் 45. மாமியார் சாந்தி 40. ஆகியோர் சேர்ந்து நாகராஜ் பெற்றோரை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். சமாதானம் செய்த பின் நாகராஜ் பெற்றோருடன் வினோபாஜி காலனியில் வசிக்கும் தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்களை அணைக்கரைப்பட்டியை சேர்ந்த மாமனாரின் உறவினர்கள் சேகர் 40. சூர்யா 24. சுரேஷ் 22. ஆகியோர் சேர்ந்து நாகராஜ், மோகன், மகாதேவி ஆகிய மூவரையும் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளனர்.நாகராஜ் புகாரில் போடி டவுன் போலீசார் மாமனார் பரமசிவம், மாமியார் சாந்தி உறவினர் சேகர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை