நெசவாளர்கள் மீது வழக்கு
ஆண்டிபட்டி,: கைத்தறிகளில் உற்பத்தி செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை ஆண்டிபட்டி பகுதியில் விசைத் தறிகளில் உற்பத்தி செய்கின்றனர். இதுகுறித்த தகவல் அறிந்த மதுரை கைத்தறி உற்பத்தி ரக ஒதுக்கீடு உதவி அமலாக்க அலுவலர் செல்வம் தலைமையிலான அலுவலர்கள் ஆண்டிபட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.சண்முக சுந்தரபுரத்தைச் சேர்ந்த ஜக்கையன், சின்னராஜ் ஆகியோர் தங்கள் வீடுகளில் உள்ள விசைத்தறிகளில், கைத்தறிகளுக்கு சேலைகளை கூடுதல் பாவு இழைகளுடன் விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது தெரிய வந்தது. இருவர் மீதும் அமலாக்கத்துறையினர் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் ரக ஒதுக்கீடு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.