மறியலில் ஈடுபட்ட 130 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி (தி.மு.க.,), துணைத்தலைவர் ஞானமணி (தி.மு.க.,) இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி தலைவர், தி.மு.க., கவுன்சிலர் ராஜவேலு சமுதாயத்தினர் கொடைக்கானல் காட்ரோடு பிரிவு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ராஜவேலு தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்டீபன் தரப்பினர் கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வி.ஏ.ஓ., க்கள் ஜெயசீலன், கற்பகவள்ளி புகாரில் இரு தரப்பைச் சேர்ந்த 130 ஆண்கள், பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.