உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தெரு பெயர் குறிப்பிடாத ஆவணங்கள் காத்திருப்புக்கு   மாற்றம் ! நில உரிமையாளர்கள் பதிவு செய்ய முடிாமல் பரிதவிப்பு  

தெரு பெயர் குறிப்பிடாத ஆவணங்கள் காத்திருப்புக்கு   மாற்றம் ! நில உரிமையாளர்கள் பதிவு செய்ய முடிாமல் பரிதவிப்பு  

தேனி, தேனி மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைனில் சொத்துப் பதிவிற்காக ஆவணங்களை பதிவேற்றுவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், சர்வே எண்களில் உள்ள உட்பிரிவு எண்,தெருவின் பெயரை குறிப்பிடாமல் விட்டால் ஆவணங்கள் பதிவுக்கு எடுக்கப்படாமல் ‛பெண்டிங்' பதிவு என காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்படுவதால் பொது மக்கள், நிறுவனங்கள், பத்திரத் எழுத்தர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தேனி மாவட்டப் பதிவாளர் அலுவலகம் பெரியகுளத்தில் நீண்ட காலமாக இயங்கியது. கடந்த 2023 ஜூலை 21ல் தேனி பெருந்திட்ட வளாகத்தில் ரூ.3.51 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட இணை சார்பதிவாளர் அலுவலகம், தேனி சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் என 5 தாலுகாக்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இயங்கி வருகிறது. காலதாமதம்: ஆன்லைனில் ஆவணங்களை 2.0 என்ற மென்பொருளில் பதிவேற்றிய பின் அதனை சரிபார்த்து ஆதார் சரிபார்ப்பு, புகைப்படம் எடுக்கப்பட்டு, இணைப்பு ஆவணங்களை சரிபார்த்த, பதிவு கட்டணம் பெற்று, சொத்துப் பதிவு செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சர்வர் தொய்வு காரணமாக ஆவணங்கள் பதிவேற்றப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 50 முதல் 150 சொத்துக்கள் பதிவானது. இதுவே 3.0 என்ற மென்பொருளை பதிவேற்றம் செய்தால் நாள் ஒன்றுக்கு வழக்கத்தை விட கூடுதலாகவும், பண்டிகை நாட்களில் 300 பதிவுகள் வரை செய்யலாம் என கணக்கிட்டு புதிய மென்பொருளை பதிவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. தெரு பெயர் கட்டாயம் இதில் பதிவு செய்யப்படும் சொத்து அமைந்துள்ள இடம், சர்வே எண், சர்வே எண்ணில் உட்பிரிவு என்றால் அதற்கான எண், நிலம், வீடு, சொத்து அமைந்துள்ள தெருக்களின் பெயர் போன்ற விபரங்கள் முறையாக பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில் பதிவாகும் 100 சதவீத சொத்துக்களில் 68 சதவீத சொத்துக்களின் விபரங்களில் தெரு, சர்வே எண்ணின் உட்பிரிவு எண் உள்ளிட்ட விபரம் பதிவேற்ற தவறுவதால், பதிவ விண்ணப்பங்களை நிராகரித்து, காத்திருப்புப் பட்டியலுக்கு அனுப்பி, (பதிவு பெண்டிங்) என அறிவிக்கின்றனர். இதனால் பண்டிகை தினம், நல்ல நாட்களில் சொத்து வாங்க நினைக்கும் நில உரிமையாளர்கள், பொது மக்கள் மன உளைச்சலுக்கும், பாதிப்பிற்குள் உள்ளாகின்றனர். பத்திர எழுத்தர்களும் சங்கடத்தில் தவிக்கின்றனர். இதற்கு மாவட்டப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை