உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சபரிமலை சென்ற சென்னை பக்தர் பலி

சபரிமலை சென்ற சென்னை பக்தர் பலி

கூடலுார்:சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் யுவராஜ் 53. இவர் 14 ஐயப்ப பக்தர்களுடன் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றார். நேற்றுமுன்தினம் வண்டிப்பெரியாறிலிருந்து சத்திரம் வழியாக வனப்பாதையில் சபரிமலைக்கு நடந்து சென்ற போது புல்மேடு அருகே கழுதைக்குழி என்ற இடத்தில் தவறி விழுந்தார். உடனடியாக மருத்துவக் குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். குமுளி இன்ஸ்பெக்டர் ஜோபின் ஆண்டனி விசாரிக்கிறார். ஏற்கனவே இந்த சீசனில் இதே பாதையில் இரண்டு ஐயப்ப பக்தர்கள் தவறி விழுந்து பலியானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை