| ADDED : நவ 15, 2025 05:20 AM
தேனி: அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நேருவின் படத்திற்கு பள்ளிகல்வி சங்கச் செயலாளர் பாக்கியகுமாரி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தன. முதல்வர் பரந்தாமன் நேருவின் வாழ்க்கை வரலாறுகள் குறித்து பேசினார். மாணவகளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் வினோத்குமார், பள்ளி மேலாளர் கார்த்திகேயன், ஆசிரியைகள் சித்ரா, வாணிஸ்ரீ, ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். மாவட்டச் செயலாளர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, நகரத் தலைவர் கோபிநாத், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாவட்டத் தலைவர் இனியவன், நகர நிர்வாகிகள் சுதாகர், சங்கர், முகமதுமீரான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.