உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதில் மோதல்: 7 பேர் மீது வழக்கு

வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதில் மோதல்: 7 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி : வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதில் இரு தரப்பு மோதலில் 7 பேர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பெரியகுளம் ஒன்றியம் மேல்ங்கலம் ஊராட்சியில் பட்டாளம்மன் முத்தையா கோவில் உள்ளது. இதனருகே வராகநதியில் வெள்ளத்தடுப்புச் சுவர் கட்டுமான பணி தேனி எம்.பி., ரவீந்திரநாத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் 90 மீட்டர் தடுப்பு சுவர் கட்டுவதற்கு பணி துவங்கியது. 60 மீட்டர் கட்டப்பட்ட நிலையில், 30 மீட்டர் கட்டுமானத்தில் முத்தையா கோயில் பின்புறமாக சாமி கரகம் எடுக்கும் இடத்தில் தடுப்புச்சுவர் கட்டுவதில் அம்மாபட்டி தெரு, கீழத்தெருவினருக்கும் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.கீழத்தெரு முருகன் புகாரில், அம்மாபட்டி தெருவை சேர்ந்த சங்கன் மாயாண்டி, கணேசன், கட்டத்தேவன் ஆகிய 4 பேர் கல்லால் அடித்ததில் தலையில் காயம் என புகாரும், அம்மாபட்டி தெரு கட்டத்தேவன் புகாரில், கீழத்தெருவை சேர்ந்த முருகன், லட்சுமணன், ஆனந்தம் ஆகிய மூவர் என மொத்தம் 7 பேர் மீது தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கட்டத்தேவன் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தேனி மருத்துவக் கல்லூரி,மற்றும் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை