உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அடிப்படை வசதி கோரி கலெக்டர் ஆபீஸ் முன் தர்ணா

அடிப்படை வசதி கோரி கலெக்டர் ஆபீஸ் முன் தர்ணா

தேனி : அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பாலசமுத்திரம் கிராமத்தினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.ஆண்டிப்பட்டி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சி பாலசமுத்திரத்தில் அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக செய்து தரவில்லை என கோரி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்க வந்தனர். கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதி வழங்காததால் அலுவலக நுழைவாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். அடையாள அட்டைகளை தர்ணா நடந்த இடத்திற்கு முன் வைத்திருந்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் கலெக்டரை சந்தித்து ஆவணங்களை திருப்பி அளிப்போம் என்றனர். தொடர்ந்து கிராமத்தினர் சிலருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ