மேலும் செய்திகள்
ஆட்டோ மோதி டிரைவர் கொலை
07-Sep-2025
தேனி: தேனியில் ஆட்டோவில் பயணித்த ஓய்வு பெற்ற ஆசிரியை முனியம் மாளிடம் 85, ஒன்பது பவுன் செயின், ரூ.10 ஆயிரத்தை மிரட்டி பறித்த ஆட்டோ டிரைவர் விக்னேஷை 35, அல்லிநகரம் போலீசார் கைதுசெய்தனர். தேனி சமதர்மபுரம் முனியம்மாள். இவர் கடந்த வெள்ளி மாலை மதுரை ரோட்டில் உள்ள சர்ச்சிற்கு சென்றார். வழிபாடு முடிந்து அவ்வழியாக சென்ற விக்னேஷ் ஆட்டோவில் வீடு திரும்பினார். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில் உணவு பார்சல் வாங்கினார். முனியம்மாளை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் பெரியகுளம் ரோட்டில் தென்றல் நகர் பகுதிக்கு அழைத்துச் சென்று முனியம்மாள் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் செயின், பர்சில் இருந்த ரூ.10 ஆயிரத்தை ஆட்டோ டிரைவர் பறித்துக் கொண்டு அவரையும் இறக்கி விட்டு தப்பிசென்றார். அப்பகுதி கடைக் காரர்கள் மூலம் முனியம்மாள் மகனிடம் தெரிவித்தார். மகன் ஜான் இருதயராஜ் தாயாரை மீட்டு அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். பெரியகுளம் ரோட்டில் பொருத்தப்பட்ட கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து இதில் ஈடுபட்ட பயர் சர்வீஸ் ஓடைத்தெரு டிரைவர் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
07-Sep-2025