உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனப் பகுதிகளில் வறட்சி ஆரம்பம் தேக்கடிக்கு செல்லும் யானைகள்

வனப் பகுதிகளில் வறட்சி ஆரம்பம் தேக்கடிக்கு செல்லும் யானைகள்

கம்பம் : வனப்பகுதிகளில் வறட்சி ஆரம்பமாகி உள்ளதால் தண்ணீரை தேடி மேகமலை பகுதியில் இருந்து தேக்கடி ஏரியை நோக்கி யானைகளும், மான்கள் கூட்டங்கள் செல்கின்றன.மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், சிறுத்தை, மான்கள், காட்டு மாடுகள், பன்றிகள் என பலவகை உயிரினங்கள் உள்ளன. புலிகள் காப்பகமாக மாறிய பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது.கடந்த ஒரு மாதமாக இப் பகுதியில் மழை இல்லை. இதனால் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் குடிக்க தண்ணீரின்றி வன உயிரினங்கள் தண்ணீர் தேடி செல்ல துவங்கி உள்ளது. மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, வண்ணாத்தி பாறை, யானை கெஜம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகளும், மான்களும், காட்டு மாடுகளும் தேக்கடி ஏரியை நோக்கி செல்ல துவங்கியுள்ளன. வனப்பகுதிகளில் சில இடங்களில் வன உயிரினங்கள் தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகளில் தண்ணீர் தேக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை