உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ‛தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள்  ஆர்வம்! மின்வாரிய அலுவலகங்களில் விண்ணப்பம் குவிகிறது

‛தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள்  ஆர்வம்! மின்வாரிய அலுவலகங்களில் விண்ணப்பம் குவிகிறது

தேனி: விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்க அனுமதி அளித்துள்ளதால் தேனி மாவட்ட மின்வாரிய அலுவலகங்களில் விவசாய மின் இணைப்பு பெற விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு மின்வாரியம் மூலம் 2025 -- 2026க்கான விரைவு தட்கல் திட்டத்தில், விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பங்கள் பெறலாம் என டிச.15ல் மின் பகிர்மான கழகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ஏற்கனவே தட்கல் முறையில் விண்ணப்பித்து பதிவு செய்துள்ளவிவசாயிகளுக்கும், தற்போது புதிய இணைப்பு பெற விரும்பும் விவசாயிகளுக்கும் மின் பளுவின் தேவைக்கு ஏற்ப விண்ணப்பத்தாரர்கள் விருப்பத்தின் அடிப்படையில் திட்டத் தொகையினை செலுத்தி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. திட்ட விபரம் 5 குதிரைத் திறன் (ஹெச்.பி.,) தேவைப்படும் ஒரு விவசாயி ரூ.2.50 லட்சத்திற்கான வரைவோலை (டி.டி.,) SE / TNPDCL / TEDC (Payable at theni ) என்ற பெயரில் எடுத்து, செயற்பொறியாளர் அலுவலகத்தில் பெற்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நிலத்தின் சிட்டா நகலுடன் இணைத்து சுய கையெழுத்திட்டு வழங்கிட வேண்டும். இதுவே 7.5 ஹெச்.பி., மின் திறனுக்கு ரூ.2.75 லட்சத்திற்கும். 10 ஹெச்.பி.,திறன் வரை ரூ.3 லட்சத்திற்கும், 15 ஹெச்.பி., திறன் வரை ரூ.4 லட்சத்திற்கான டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தட்கல் திட்டத்தில் கூடுதல் பயன் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகள் பீடர் லைனுக்கு வெளியே விளைநிலம் இருந்தாலும், அதுவரை மின்பகிர்மான வழித்தடத்தை கொண்டு செல்லும் முழுச் செலவு மின்வாரியம் ஏற்கும் என்பதால் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைப்புப் பெற, செயற்பொறியாளர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை போட்டி போட்டிக்கொண்டு வழங்கினர். மேற்பார்வை பொறியாளர் லட்சுமி கூறுகையில், இத்திட்டத்தில் ஏற்கனவே மாநிலம் முழுவதும் 935 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஏற்கப்படும் விண்ணப்பங்களை பொறுத்து மின் இணைப்பு வழங்கப்படும். மாநிலத்தில் 10 ஆயிரம் பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயித்து மின் பகிர்மான கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் விவசாயிகள் நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை