உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நூற்பாலை நிர்வாக அலுவலர் மீது பெண் பணியாளர் பாலியல் புகார்

நூற்பாலை நிர்வாக அலுவலர் மீது பெண் பணியாளர் பாலியல் புகார்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலை செயல் அலுவலர் ஜெகதீசனுக்கு எதிராக அங்கு பணிபுரியும் பெண் இளநிலை உதவியாளர் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த ஜெகதீசன் நூற்பாலையின் நிர்வாக அலுவலராக உள்ளார். இதே ஆலை அலுவலகத்தில் 44 வயது பெண் இளநிலை உதவியாளராக பணி செய்கிறார்.சில மாதங்களாக நிர்வாக அலுவலர் ஜெகதீசன் பெண் இளநிலை உதவியாளரிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசுவது, ஆபாசமாக பேசி தொட முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து எச்சரித்தும் அவர் அத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளார். இதுகுறித்து பெண் இளநிலை உதவியாளர் க.விலக்கு போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெகதீசன், நூற்பாலை அலுவலர்கள், தொழிலாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி