உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.18.68 லட்சம் நிதி வழங்கல்

 இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.18.68 லட்சம் நிதி வழங்கல்

தேனி: தேனி முத்துத்தேவன்பட்டி இந்திரக்குமார் இந்திராணி தம்பதியின் மகன் சதீஸ்பாபு 28. இவர் சென்னை பெருநகர ஆயுதபடையில் போலீஸ்காரராக பணிபுரிந்தார். ரத்த அழுத்தம் காரணமாக 2025 செப்.6ல் பணியின் போது இறந்தார். சதீஸ்பாபு, 2017ல் பணியில் சேர்ந்தார்.அந்த ஆண்டில் இவருடன் பணியில் சேர்ந்த 38 மாவட்டங்களில் பணிபுரியும் 6927 போலீசார், இறந்த நண்பரின் குடும்பல நல நிதியாக மொத்தம் 18 லட்சத்து 68 ஆயிரத்து 800 ரூபாய் சேகரித்தனர். அந்த குடும்ப நல நிதிக்கான காசோலையை தேனி எஸ்.பி., சினேஹாபிரியா, இறந்த போலீஸ்காரரின் தாய்,தந்தையிடம் வழங்கி ஆறுதல் கூறினார். தேனியில் பணிபுரியும் 2017 பேட்ச் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி