உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கால்பந்தாட்டப்போட்டி துவக்கம்

கால்பந்தாட்டப்போட்டி துவக்கம்

மூணாறு : மூணாறில் 75ம் பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டம் போட்டிகள் நேற்று துவங்கியது.மூணாறில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி கே.டி.எச்.பி. கம்பெனி செயல்படுகிறது. இந்த கம்பெனி எஸ்டேட்டுகளுக்கு இடையே தொழிலாளர்கள் பங்கேற்கும் பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டம் போட்டிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.இந்தாண்டு 75ம் ஆண்டு போட்டிகள் நேற்று துவங்கின. மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி துவக்கி வைத்தார்.பின்லே சுழற்கோப்பை குழு தலைவர் கில், கே.டி.எச்.பி. கம்பெனி துணைத் தலைவர் மோகன் சி. வர்க்கீஸ், பொது மேலாளர் கரியப்பா உள்பட பலர் பங்கேற்றனர்.முதல் நாளான நேற்று நயமக்காடு, லெட்சுமி ஆகிய எஸ்டேட் அணிகள், கே.டி.எச்.பி. டிபார்ட்மென்ட், சூரிய நல்லி எஸ்டேட் ஆகிய அணிகள் மோதின. அதில் 1-0 என்ற கோல் கணக்கில் லெட்சுமி எஸ்டேட் அணியும், 3 - 1 என்ற கோல் கணக்கில் கே.டி.எச்.பி. டிபார்ட்மென்ட் அணியும் வெற்றி பெற்றன.14 அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி மார்ச் 9ல் நடக்கிறது.முற்றிலும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக 1941ல் ஆங்கிலேயர்களால் கால்பந்தாட்டப் போட்டி துவங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர், கொரோனா ஆகிய காலங்களில் மட்டும் போட்டிகள் முடங்கின என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி