உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பை வீசிய வனத்துறைக்கு அபராதம்: ஊராட்சி நடவடிக்கை

குப்பை வீசிய வனத்துறைக்கு அபராதம்: ஊராட்சி நடவடிக்கை

மூணாறு: தேவிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவிகுளம் டவுன், மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட், குண்டளை எஸ்டேட் புதுக்கடி ஆகிய பகுதிகளில் பொது இடங்கள், ஆறு, அணை ஆகியவற்றில் குப்பை பெரும் அளவில் வீசப்பட்டன. ஊராட்சி செயலர் சஜீவ்குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதில் குப்பை வீசியவர்கள் குறித்து தெரிய வந்தது. அதன்படி தேவிகுளம் பகுதியில் உள்ள இரண்டு தங்கும் விடுதிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம், வேறொரு தங்கும் விடுதிக்கு ரூ.10 ஆயிரம், மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட்டில் வனத்துறை சோதனை சாவடிக்கு ரூ.5 ஆயிரம், அதே பகுதியில் இரண்டு கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், புதுக்கடி விலக்கு பகுதியில் ஐந்து கடைகளுக்கு தலா ரூ.1000 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை