பெரியகுளம்: மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பெரியகுளத்தில் அ.தி.மு.க., சார்பில் வடகரை பஸ்ஸ்டாண்டில் ஜெ.படத்திற்கு நகர செயலாளர் பழனியப்பன் மாலை அணிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பெரிய வீரன், அண்ணா தொழிற்சங்கம் மண்டல தலைவர் முபாரக்அலி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். வடுகபட்டியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் மாலை அணிவித்தார். ஒன்றிய செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, பேரூர் செயலாளர் பாலமுருகன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவினர் அரண்மனைத் தெருவில் ஜெ., படத்திற்கு நகர செயலாளர் அப்துல்சமது மாலை அணிவித்தார். அமைப்பு செயலாளர்கள் ராதா, மஞ்சுளா, ஜெயப்பிரகாஷ், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், முருகானந்தம், அன்பு, பன்னீர் செல்வம், ராஜகோபால், பாலசுந்தரம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். அ.ம.மு.க., வினர் அரண்மனைத் தெருவில் ஜெ., படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., கதிர்காமு மாலை அணிவித்தார். நகர செயலாளர் குபேந்திரன்,கவுன்சிலர்கள் மணி வெங்கடேசன், பால்பாண்டி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆண்டிபட்டி: அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., சிலை, பஸ் ஸ்டாண்ட் ஆகிய இரு இடங்களில் ஜெ.,படம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர் செயலாளர் அருண்மதிகணேசன், ஒன்றிய அவைத்தலைவர் மதியரசன், ஒன்றிய பொருளாளர் லோகநாதன், நகர துணைச் செயலாளர் பொன்முருகன் உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஜெ.,படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.