உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கம்பம் பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் கூரை இடிந்து விழும் அபாயம்

 கம்பம் பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் கூரை இடிந்து விழும் அபாயம்

கம்பம்: கம்பம் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் 20 ஆண்டுகளாக பராமரிப்பு செய்யாததால் கட்டடத்தின் சிமென்ட் கூரை பெயர்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. கம்பம் நகராட்சியில் கம்பராயப் பெருமாள் கோயில் இடத்தில் செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்ட், போதிய வசதி இல்லாமல் இருந்ததாலும் நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. 2001 முதல் 2005 வரை நகராட்சி தலைவராக இருந்த ராஜாமணி முயற்சி செய்து புது பஸ் ஸ்டாண்ட் கட்டினார். இங்கு 20 க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் ஆயிரக்கணக்கில் வாடகை தருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் கட்டி 20 ஆண்டுகளாக பராமரிப்பு செய்ய வில்லை. கடந்தாண்டு ரூ 1.75 கோடியில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்ட போதும், வாடகை தரும் கடைகளை பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டனர். பெரும்பாலான கடைகளில் தரை தளம் பெயர்ந்துள்ளது. இங்குள்ள ஓட்டல் கூரை சிமென்ட் கான்கீரிட் பெயர்ந்து மழை நீர் ஓட்டலில் சாப்பிடுபவர்களை நனைத்து வருகிறது. எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் உள்ளனர். இது பற்றி பல முறை கமிஷனர், பொறியாளரிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை இல்லை என புலம்புகின்றனர். கடைக்காரர்கள் கூறுகையில், 'சமீபத்தில் பராமரிப்பு மேற்கொண்ட போது, கடைகளுக்கு வெளியே பெயிண்ட் அடித்து சென்றனர். கடைகளுக்கு உள்ளே எந்த பராமரிப்பும் செய்யவில்லை. இங்குள்ள ஓட்டல் கூரை ஆர்.சி. பெயர்ந்து தினமும் விழுந்து வருகிறது. எப்போது இடிந்து விழப்போகிறதோ தெரியவில்லை. கொரோனா காலத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்த காலத்திற்கும் வாடகை வசூலித்தனர். ஆனால் கடைகளை பராமரிப்பதில் நகராட்சி மெத்தனமாக உள்ளது என்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சிமென்ட் கூரையை இடித்து விட்டு புதிதாக ஆர்.சி. போட்டு தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி