மனித உரிமை விழிப்புணர்வு கலந்துரையாடல்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லுாரியின், மனித உரிமைகள் கிளப் சார்பில், மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், கலந்துரையாடல் நடந்தது. கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அனிஸ் பாத்திமா தலைமை வகித்து பேசியதாவது: மனித உரிமைகள் பற்றி ஒவ்வொரு சராசரி மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்களை நாம் மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் பிரச்னைகள் தொடர்பாக மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகள் கல்வி தொடர்பான டிஜிட்டல் உள்ளடக்கம் குறித்த அர்த்தமுள்ள விவாதங்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டதுஎன்றார். இந்தக் கலந்துரையாடலில் அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த கிளப்பின் உறுப்பினர் முனைவர் பெனாசிர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். ஏற்பாட்டுக் குழுவினரை கல்லுாரியின் முதல்வர் முகமது மீரான் பாராட்டினார்.