உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டம் அறிமுகம்! கிராமங்களில் தடையில்லா மின் வினியோகத்திற்கு ஏற்பாடு

மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டம் அறிமுகம்! கிராமங்களில் தடையில்லா மின் வினியோகத்திற்கு ஏற்பாடு

அத்தியாவசிய தேவைகளில் மின்சாரம் முக்கியமானதாகும். அனைத்து வேலைகளுக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. மின்சாரம் இல்லாவிட்டால் எதுவுமே செய்ய முடியாத நிலை உள்ளது.கிராமங்களில் வேளாண் மின் இணைப்புகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கான மின் இணைப்புகளுக்கும் ஒரே 'டிரான்ஸ்பார்மர்' மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. வேளாண் இணைப்புகளுக்கு நாள்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே விநியோகம் இருக்கும். வீடுகளுக்கு 24 மணி நேரமும் சப்ளை இருக்க வேண்டும். ஒரே டிரான்ஸ்பார்மர் என்பதால் வேளாண் இணைப்புகளுக்கு சப்ளையை நிறுத்தும் போது, குடியிருப்புகளுக்கும் சப்ளையை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதை தவிர்க்க மத்திய அரசு ஆர்.டி.எஸ்.எஸ்., (Revamped Service Sector Scheme) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. கடந்த 2021 முதல் 2026 வரை 5 ஆண்டுகளுக்கான திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 758 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் 'பிரிபெய்டு ஸ்மார்ட் மீட்டர்'கள் 20 கோடியே 46 லட்சம் மீட்டர்களும், பீடர்களுக்கான மீட்டர்கள் 1 கோடியே 98 லட்சம் மீட்டர்களும் அனுமதிக்கப்பட்டு உள்ளன. தற்போது கிராமங்களில் டிரான்ஸ்பார்மர்களில் உள்ள வேளாண், குடியிருப்பு இணைப்புகளை தனித் தனியாக பிரித்து மின் வினியோகம் வழங்க பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் கிடைக்கும். வேளாண் இணைப்புகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சப்ளை இருக்கும். இத்திட்டத்திற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ