உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காமயகவுண்டன்பட்டி வேளாண் விரிவாக்க மையம் திறப்பு * தினமலர் செய்தி எதிரொலி (லோகோ வைக்கவும்)

காமயகவுண்டன்பட்டி வேளாண் விரிவாக்க மையம் திறப்பு * தினமலர் செய்தி எதிரொலி (லோகோ வைக்கவும்)

கம்பம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக காமயகவுண்டன்பட்டியில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையம் செயல்படத் துவங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து வட்டாரத்திலும் உதவி இயக்குநர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் துணை வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வேளாண் இடுபொருள்கள், விதைகள், தொழில் நுட்ப விபரங்கள் எளிதாக பெறுவதற்கு விவசாயிகளுக்கு இந்த துணை மையங்கள் உதவுகின்றன. கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு காமயகவுண்டன் பட்டியில் துணை வேளாண் விரிவாக்க மையம் உள்ளது. பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் இந்த விரிவாக்க மையம் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பரவலாக விவசாயிகள் புகார் அளித்ததன் பேரில், தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக துணை வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்பட்டு செயல்படத் துவங்கி உள்ளது. இதுகுறித்து கம்பம் வேளாண் உதவி இயக்குநர் தெய்வேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்கள் கிட்டங்கி அலுவலர், தணிக்கை பணிக்கென உதவி இயக்குநர் அலுவலகம் வந்ததால், விரிவாக்க மையம் திறக்கப்படவில்லை. இனி வரும் காலங்களில் அவ்வாறு வெளியில் செல்லும் போது, மாற்று அலுவலரை நியமித்து, விரிவாக்க மையம் மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை