உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லட்சுமி ஹயக்ரீவர் யாகம்

லட்சுமி ஹயக்ரீவர் யாகம்

போடி, : போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் டூ அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதவும், தேர்வு நேரங்களில் ஏற்படும் பயத்தை நீக்கும் வகையிலும் லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜை நடந்தது. கோயில் தக்கார் மாரிமுத்து தலைமை வகித்தார். மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். லட்சுமி ஹயக்ரீவர் யாகம் பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில், கயிறு குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டன. சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ