உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  30அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

 30அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மூணாறு: மூணாறு நகரில் ஜி.எச்.ரோட்டில் டீக்கடையுடன் பேக்கரி நடத்தியவர் ஆண்டனிஜார்ஜ் 49. இவர் நகரில் பெரியவாரை ஜங்ஷனில் முஸ்லீம் பள்ளிவாசல் அருகே குடும்பத்துடன் வசித்தார். எர்ணாகுளத்தில் இருந்து மூணாறுக்கு வந்த ஆண்டனிஜார்ஜின் உறவினர்கள் மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் தங்கினர். ஆண்டனிஜார்ஜ் வீட்டின் அருகே காரை நிறுத்துவதற்காக, அங்கு நிறுத்தி இருந்த டூவீலரை நகர்த்த முயன்றார். அப்போது கால் தவறி 30 அடி உயரத்தில் இருந்து ரோட்டில் விழுந்தவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை