உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று நிறைவு

மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று நிறைவு

தேவதானப்பட்டி : மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலைத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா மார்ச் 8ல் துவங்கி மார்ச் 15 வரை நடக்கிறது. திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். எட்டு நாட்கள் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது, மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ