உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்

தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தை கலெக்டர் ஷஜீனா துவக்கி வைத்தார்.ஜன.,25ல் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர்கள் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அலுவலக வளாகத்தில் ரங்கோலி போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க கலெக்டர் பரிசுகள் வழங்கப்பட்டன. மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்களிக்க வலியுறுத்தியும், மாதிரி ஓட்டுபதிவிற்காக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வாகனங்கள் 4 சட்டசபை தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். விழாவில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்து, பெரியகுளம் ஆர்.டி.ஒ., முத்துமாதவன், மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், தேர்தல் தாசில்தார் சுகந்தா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை