| ADDED : பிப் 19, 2024 04:57 AM
தேனி : தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து அரண்மனைப்புதுார் விலக்கு வரை உள்ள ரோட்டில் விளக்குகள் எரியாததால் பயணிகள் அச்சத்துடன் நடந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.இப்பஸ் ஸ்டாண்டில் இருந்து உள்ளூர், வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடமலைக்குண்டு, க.விலக்கு, வெங்கடாசலபுரம், கொடுவிலார்பட்டி பகுதிகளில் இருந்து இரவு நேரத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், ஆட்டோக்களில் பயணிகள் வருகின்றனர். இவர்கள் அரண்மனைப்புதுார் விலக்கு, வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அருகே இறங்கி அங்கிருந்து நடந்து சென்று, கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டு வருகின்றனர். இந்த ரோட்டின் இருபுறமும் மின் கம்பங்கள் அமைத்து விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் விளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அவ்வழியாக செல்லும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தில் பயணிகள் நடந்து செல்லும் அவல நிலை தொடர்கிறது. நடந்து செல்வோரிடம் சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. அந்த ரோட்டில் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.