உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயி இறப்பில் மர்மம் - போலீசார் விசாரணை; பாம்பு கடித்து பெண் பலி

விவசாயி இறப்பில் மர்மம் - போலீசார் விசாரணை; பாம்பு கடித்து பெண் பலி

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே உப்புத்துறையைச் சேர்ந்தவர் சேதுராமன் 27. விவசாயி. இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து, மகன் உள்ளார். நேற்று காலை சேதுராமன் ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்க தாழையூத்து கிராமத்திற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் சேதுராமன் அப்பகுதி மலை அடிவாரத்தில் மயக்க நிலையில் கிடப்பதாக, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு கடமலைக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தலையில் லேசான காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து சேதுராமன் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ