போலீஸ் செய்திகள்......
தகராறு நால்வர் மீது வழக்குதேனி: பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெரு விவசாயி முருகதாஸ் 46. இவருக்கும், இவரது உறவினர் ஆசைக்குமாருக்கும் பூர்வீக நிலம் தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் பிரச்னைக்கு உரிய நிலத்தில் இருந்த மரத்தை ஆசைக்குமார் வெட்டினார். இதனை முருகதாஸ் தட்டிக்கேட்டார். இந்த பிரச்னையில் ஆசைக்குமார் கொலை மிரட்டல் விடுத்தார். இவரது மனைவி கலா, மகன்கள் பரத், சிவா ஆகியோர் திட்டினர். முருகதாஸ் புகாரில் நால்வர் மீது வழக்கு பதிந்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருட்டுதேனி: பழனிசெட்டிபட்டி பைசல் 36. இவர் போடி ரோடு பைபாஸ் ரோடு சந்திப்பில் உள்ள டீ கடையில் பணிபுரிகிறார். கடை முன் டூவீலரை நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.