உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வரி வருவாயை 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டும்: ஊராட்சி செயலர்கள் கோரிக்கை

வரி வருவாயை 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டும்: ஊராட்சி செயலர்கள் கோரிக்கை

கம்பம் : வரி வருவாயை 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி செயலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சிகளில் மட்டுமே தலைவருக்கு செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் உள்ளது. பேரூராட்சிகள், நகராட்சிகளில் தலைவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. சமீபத்தில் நிதி முறைகேடுகளை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக ஊராட்சிகளில் தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் கையழுத்திட அரசு உத்தரவிடப்பட்டது. அதுவும் மாற்றப்பட்டு முழுக்க முழுக்க ஆன்லைன் பரிவர்த்தனைகளாக மாற்றப்பட்டு விட்டது.இந்நிலையில் ஊராட்சிகளின் வரி வருவாயை சென்னை வங்கியில் உள்ள 'ஸ்டேட் நோடல் அக்கவுண்ட்'டிற்கு செலுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி அன்றாடம் வசூலாகும் வரி வருவாய் எஸ்.என்.ஏ. வில் வரவு வைக்கப்பட்டது.ஒவ்வொரு மாதமும் 30ம் தேதி அந்த வரி வருவாய் திருப்பி தரப்படுகிறது. இதனால் ஊராட்சிகளில் தெரு விளக்கு, குடிநீர் குழாய், பொது சுகாதார பராமரிப்பிற்கு அன்றாடம் தேவைப்படும் பணத்திற்கு கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாத கடைசியில் தரும் வரி வருவாயை இரண்டு பகுதிகளாக பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்க ஊராட்சி செயலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி