உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓடை மீது அமைத்த கடை அகற்றம்

ஓடை மீது அமைத்த கடை அகற்றம்

மூணாறு : மூணாறில் விதிமுறைகள் மீறி ஓடை மீது அமைக்கப்பட்ட கடையை வருவாய் துறையினர் அகற்றினர். மூணாறு நகரில் நடையார் ரோட்டில் ஓடையை ஆக்கிரமித்து அதன் மீது விடுமுறைகள் மீறி கடை வைக்கப்பட்டது. அதனை அகற்றுமாறு சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடையை அகற்றுமாறு இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் முன்னோடியாக வருவாய் துறையினர் ஜன.23ல் கடையை கையகப்படுத்தி சீல் வைத்ததுடன் அரசுக்குச் சொந்தமான கட்டடம் என நோட்டீஸ் ஒட்டினர். கடையை அகற்றும் பொறுப்பு ஊராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.அகற்றம்: ஊராட்சி நிர்வாகம் கடையை அகற்றாதால் தேவிகுளம் தாசில்தார் (எல்.ஆ) சுரேஷ்குமார், மூணாறு வி.ஏ.ஓ., செல்வி ஆகியோர் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள், நிலம் பாதுகாப்பு படை, போலீஸ் ஆகியோரின் உதவியுடன் நேற்று கடையைஅகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை