உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  விருந்துக்கு வந்த ஓய்வு போலீஸ்காரருக்கு வெட்டு

 விருந்துக்கு வந்த ஓய்வு போலீஸ்காரருக்கு வெட்டு

பெரியகுளம்: பெரியகுளத்தில் வீட்டிற்கு விருந்துக்கு வந்த ஓய்வு போலீஸ்காரர் காசிநாதனை 46. அரிவாளால் வெட்டிய நண்பரின் மகன் முகிலனை 25, போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் காசிநாதன் 46. இவர் 2003ல் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்று, பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சிவனடியராக உள்ளார். பெரியகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்த இவரது நண்பர் அண்ணாத்துரை 55. காசிநாதனை வீட்டிற்கு உணவு சாப்பிட அழைத்து வந்துள்ளார். வீட்டிலிருந்த அண்ணாத்துரை மகன் முகிலன் 25. மதுபோதையில் அண்ணாத்துரையிடம், 'யாசகம் பெறுபவரை வீட்டிற்கு ஏன் அழைத்து வந்தாய்,' என அண்ணாத்துரையை அடித்தார். இதனை தடுத்த காசிநாதனை அரிவாளால் வெட்டினார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் காசிநாதன் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் முகிலனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை