உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜல் ஜீவன் திட்டத்தில் தரமில்லாத பணிகளால் முடக்கம்: சின்னமனூர் ஒன்றியத்தில் குடிநீர் சப்ளை பாதிப்பு

ஜல் ஜீவன் திட்டத்தில் தரமில்லாத பணிகளால் முடக்கம்: சின்னமனூர் ஒன்றியத்தில் குடிநீர் சப்ளை பாதிப்பு

சின்னமனூர்: சின்னமனூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் தரமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பல ஊராட்சிகளில் திட்டம் முடங்கியுள்ளது என புகார் கூறுகின்றனர்.ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்ற இலக்கை அடைய மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டம் அறிமுகம் செய்தது. ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் தொட்டி கட்டுதல், உறைகிணறு அமைத்தல், பகிர்மான குழாய் பதித்தல் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளவதாகும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.20 லட்சம் முதல் ஒரு கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றியங்களில் இந்த பணிகள் 50 சதவீத பணிகள் கூட முடியாத நிலை உள்ளது. இப் பணி மேற்கொண்ட ஒப்பந்தகாரர்கள் பலர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததால் வேலைகளை அரைகுறையாக செய்து பணியை பாதியிலே கைவிட்டு சென்றுள்ளனர்.சின்னமனூர் ஊராட்சி ஒன்றியதில் உள்ள 14 ஊராட்சிகளில் ஒருசில ஊராட்சிகளில் பணி முடிந்துள்ளது. பல ஊராட்சிகளில் பணிகள் பாதி அளவே முடிந்துள்ளது. உதாரணமாக புலி குத்தி ஊராட்சிக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்பட்டது. சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் ரூ.70 லட்சம் ஒதுக்கி, அங்குள்ள புதுக்குளத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததோடு சரி. அப்படியே விட்டு சென்று விட்டனர். அய்யம்பட்டியில் ரூ.59 லட்சம் ஒதுக்கி பணி முழுமை பெறவில்லை.இதனால் பல ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் பணி ஒப்பந்தம் பெற்றவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை சின்னமனூர் ஒன்றிய நிர்வாகம் பாராமுகமாக உள்ளது. பல ஊர்களில் நடந்த பணிகள் தரமானதாக இல்லை. பகிர்மான குழாய் பதித்தது, வீடுகளுக்கு இணைப்பு கொடுத்ததில் தரமில்லாத பைப்புகளை பதித்துள்ளனர். இதனால் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.மாவட்ட நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் ஊராட்சிகளில் ஆய்வு நடத்தி திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.புலிகுத்தி ஊராட்சி தலைவர் சுப்புராஜ் கூறுகையில், தரமில்லா பகிர்மான குழாய்கள் பதித்துள்ளதால் குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை.- தற்போது ஊராட்சி நிதியிலிருந்து அந்த பைப்புகளை அகற்றிவிட்டு புதிய பைப்புகளை பதித்து வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி