உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி வசமாகும்

 மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி வசமாகும்

தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன்முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் காளிராஜ் வரவேற்றார். தேனி சி.இ.ஓ., நாகேந்திரன் வாழ்த்தி பேசினார். பள்ளியின் முன்னாள் மாணவியும் திருச்சி மாநகராட்சி ஓய்வு பெற்ற தலைமை மருத்துவர் அமுதா பேசுகையில், 'எனது ஆசிரியர்களும், குடும்பத்தினரும் பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் நான் டாக்டர் படிக்க துணை புரிந்தனர். ஒருபோதும் நம் கலாச்சாரத்தை விடாமல் கல்வியை கற்றுக் கொள்ளுங்கள்.மாணவர்கள் அலைபேசி, டி.வி., லேப்டாப் என' ஸ்கிரீன் டைம்' குறைத்து படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி வசமாகும்,' என்றார். பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். தலைமை ஆசிரியை வளர்மதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை