உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.5 லட்சம் மோசடி செய்த தற்காலிக ஊழியர் கைது

ரூ.5 லட்சம் மோசடி செய்த தற்காலிக ஊழியர் கைது

தேனி:தேனி மாவட்டம், கம்பம், உத்தமபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி தமிழ்செல்வி, 32. இவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்த செந்தில்குமார், 37 என்பவர் அறிமுகம் ஆனார்.தனக்கு சென்னையை சேர்ந்த பிரசாத்குமார் என்பவரை தெரியும். பணம் கொடுத்தால் அவர் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்றார். அதை நம்பிய தமிழ்செல்வி, செந்தில்குமார், பிரசாத்குமார் ஆகியோர் வங்கிக் கணக்கில், 7.25 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தினார்.பின், அவர்கள் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தனர். தமிழ்செல்வி பணத்தை திருப்பிக் கேட்க, 2.10 லட்சம் ரூபாயை மட்டும் பிரசாத்குமார் வழங்கியுள்ளார். மீதி பணத்தை தராமல் ஏமாற்றினர்.ஏற்கனவே, போடி பத்தாகாளிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக பணி மோசடி வழக்கில், சென்னை பிரசாத் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், தேனி மாவட்ட குற்றிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமை யிலான போலீசார் கம்பம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியராக பணியாற்றிய செந்தில்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை