ஒர்க் ஷாப்பில் திருட்டு
தேனி:பூதிப்புரம் பார்த்திபன் 25, அதே பகுதியில் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வெல்டிங் மிஷன்கள், வயர்பாக்ஸ் உட்பட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருந்தது. பார்த்திபன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.