உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இலவச சூரிய ஒளி மின் திட்டத்தில் பயன்பெற மார்ச் 8க்குள் பதிவு செய்யலாம் தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

இலவச சூரிய ஒளி மின் திட்டத்தில் பயன்பெற மார்ச் 8க்குள் பதிவு செய்யலாம் தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

தேனி : பிரதம மந்திரியின் இலவச சூரியஒளி மின் திட்டத்தில் பயன்பெற நுகர்வோர் தகவல்களை மார்ச் 8 க்குள் தபால் அலுவலகங்களில் பதிவு செய்யலாம்', என தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்து்ளளார்.அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச சோலார் மின்சாரம் வழங்கும் நோக்கில் பிரதமரின் இலவச சோலார் மின்சாரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கான்கிரீட் மேற்கூரையின் மீது சோலார் பேனல் நிறுவ சோலார் பேனல்களில் விலையில் 40 சதவீத மானியம் வழங்கப்படும். 'அஸ்பெஸடாஸ்' கூரைகள், நிலையற்ற கூரை வீடுகளில் அமைக்க முடியாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நுகர்வோர் தங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மின் இணைப்பு எண், வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் புகைப்படம் ஆகியவற்றை பிரதமரின் சோலார் மின் திட்டம் என்ற செயலியில் மார்ச 8 க்கு முன் பதிவேற்றம் செய்திட வேண்டும். இதற்கு வசதியாக தபால்துறை மூலமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுகர்வோர் தங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களை நேரில் அணுகி இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை