உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுாரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

கூடலுாரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

கூடலுார்: கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வியாபார நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை, ரத்த பரிசோதனை நிலையம், ரைஸ் மில், மருந்து கடைகள் என அதிகம் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகம்.டூவீலர்கள் நிறுத்துவதில் கட்டுப்பாடு இல்லாததால் ஆங்காங்கே அதிகம் நிறுத்தப்படுகிறது. காலை, மாலை பள்ளி வாகனங்கள் திரும்பக் கூட முடியாத வகையில் நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் பள்ளி மாணவிகள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்பவர்கள் இப்பகுதியில் கடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். போலீசார் இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலை சீராக்க முன்வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை