உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  உழவர் சேவை மைய பட்டதாரிகளுக்கு பயிற்சி

 உழவர் சேவை மைய பட்டதாரிகளுக்கு பயிற்சி

தேனி: மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் 31 உழவர் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன. இந்த சேவை மையங்கள் பட்டதாரி இளைஞர்கள் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இச்சேவை மையத்தில் வேளாண் ஆலோசனைகள் வழங்குதல், பயிர்கள் பூச்சி, நோய்களால் பாதிக்கப்பட்டால் மருந்து வழங்குதல், குறைந்த விலையில் வேளாண் கருவிகள் வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட சேவைகள் இந்த மையங்களில் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 19 சேவைமையங்கள் துவங்கப்பட உள்ளன. பயிற்சி மையத்தை நடத்த உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண், தோட்டக்கலை, விதை பரிசோதனை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை