உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்னல் தாக்கியதில் இரு வீடுகள் சேதம்

மின்னல் தாக்கியதில் இரு வீடுகள் சேதம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் மின்னல் தாக்கியதில் இரு வீடுகள், மின் சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.தெப்பம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மழை பெய்யாத நிலையில் திடீரென ஏற்பட்ட மின்னல் சின்னத்தம்பி என்பவரின் மாடி வீட்டை தாக்கியது. இதில் மதில் சுவரின் ஒரு பகுதி இடிந்து அருகில் இருந்த தகர கொட்டகையில் விழுந்து சேதமானது. கட்டிடத்தின் இடிந்த துகள்கள் 100 மீட்டர் வரை சிதறி உள்ளது.அதிஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கோ, வெளியில் இருந்தவர்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை. மின்னல் தாக்கிய வீட்டில் மின் உபகரணங்கள் வெடித்து சிதறி உள்ளது. பல வீடுகளில் 'டிவி'க்கள் சேதம் அடைந்துள்ளது. மின்னல் பாதிப்பு குறித்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் வருவாய்த்துறையினர் விவரங்களை சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை