மேலும் செய்திகள்
போலீஸ் டைரி
29-Jan-2025
போடி : போடி வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் காசிராஜன் 22. கட்டட தொழிலாளி. இவர் இரு நாட்களுக்கு முன் தினம் இரவில் தனது டூவீலரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் பார்த்த போது டூவீலர் காணவில்லை.இதுபோல போடி வஞ்சி ஓடை தெருவை சேர்ந்தவர் கண்ணன் 51. கட்டட தொழிலாளி. இவர் 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான டூவீலரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.காசிராஜன், கண்ணன் புகாரில் போலீசார் விசாரணை செய்ததில் போடி புதுக்காலனியை சேர்ந்த 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் திருடியது தெரிந்தது. இவர்களிடம் விசாரித்ததில், புதுக்காலனியை சேர்ந்த சதீஷ்குமார் 34. பத்திரகாளிபுரத்தை சேர்ந்த வீரமணி 35. ஆகியோரிடம் டூவீலரை விற்பனை செய்தது தெரிந்தது.போடி டவுன் போலீசார் சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு, சதீஷ்குமார் வீரமணி இருவரையும் கைது செய்தனர்.
29-Jan-2025