உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் தீப்பற்றிய டூவீலர்

மூணாறில் தீப்பற்றிய டூவீலர்

மூணாறு: மூணாறு நகரில் ஓடிக் கொண்டிருந்த டூவீலர் திடிரென தீப்பற்றிய சம்பவத்தில் சுற்றுலா பயணிகள் காயம் எதுவும் இன்றி தப்பினர். கேரளா, கொல்லத்தைச் சேர்ந்த ஷனீப், தனது பெண் தோழியுடன் டூவீலரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் நேற்று பகல் 11:30 மணிக்கு நகரில் டூவீலரில் சென்றபோது திடீரென தீப்பற்றியது. டூவீலரை நிறுத்தி விட்டு தக்க சமயத்தில் இருவரும் இறங்கியதால் காயங்கள் எதுவும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மூணாறு போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை