உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊஞ்சாம்பட்டி ஊராட்சியை தேனி நகராட்சியுடன் இணைக்க கூடாது: ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் எதிர்ப்பு

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியை தேனி நகராட்சியுடன் இணைக்க கூடாது: ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் எதிர்ப்பு

தேனி : தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியை தேனி நகராட்சியுடன் இணைக்க கூடாது என ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் சக்கரவர்த்தி (தி.மு.க.,) தலைமையில் ஒன்றியகுழு கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் முருகன், பி.டி.ஓ., சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியகுழு தலைவர் ஜீப் டிரைவராக பணிபுரிந்த நந்தகுமார் 2021 அக்.,11 முதல் பணிக்கு வரவில்லை. அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யவும், கிராம ஊராட்சிகளுக்கு ரூ.4.75 லட்சத்தில் பிளிச்சிங் பவுடர் மூடைகள், பினாயில் பாட்டில்கள் வாங்குதல், அலுவலக உபயோகத்திற்கு ரூ.2.38 லட்சத்தில் எழுதுபொருட்கள், பேப்பர் வாங்குதல், பி.டி.ஓ., பயன்பாட்டிற்கு ரூ.30 ஆயிரம் மாதவாடகைக்கு வாகனம் பயன்படுத்துதல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பிரகாஷ், கவுன்சிலர் (அ.தி.மு.க.,): தேனி நகராட்சியுடன் ஊஞ்சாம்பட்டி, வடபுதுப்பட்டி, அரண்மனைப்புதுார் ஊராட்சிகளை இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக ஊராட்சிகளில் கடந்த 3 ஆண்டு வரிவசூல், தணிக்கை கணக்குகள் கேட்கபட்டுள்ளன. ஊராட்சிகளை நகராட்சியில் இணைத்தால் மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்கள் பயன்பெற முடியாது. மேலும் நில மதிப்பு அதிகரித்து பொதுமக்களுக்கு சுமை ஏற்படும். ஊஞ்சாம்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது.மற்ற கவுன்சிலர்கள் கவிதா, அன்புமணி, மாலா, நாகலட்சுமி உள்ளிட்டோரும் தங்கள் பகுதியில் அங்கன்வாடி கட்டங்கள், ரோடு, கழிப்பறை வசதி உள்ளிட்டவை அமைத்து தர வலியுறுத்தினர்.

அரசி ன் நி தி ஒதுக்கீடு குறைவு

தலைவர்: ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உறுப்பினர்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தால் அரசிடம் வலியுறுத்தப்படும். உப்பார்பட்டி பகுதியில் ஒன்றியம் சார்பில் நிறைவேற்றப்படும் திட்டங்களை அந்த ஊராட்சித்தலைவர் தடுக்கிறார். நமது ஒன்றியத்திற்கு குறைந்த அளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் வளர்ச்சிப்பணிகள் தாமதமாகிறது. தேர்தல் முடிந்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை