உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஒன்றிய அலுவலகம் முற்றுகை

 ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை மந்திச்சுனை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரசுக்கு சொந்தமான இடம் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தில் பொது நூலகம் கட்டுவதற்கு திட்ட மிடப்பட்டது. தனிநபர் ஆக்கிரமிப்பால் நூலகம் கட்டுமான பணியை துவக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து மந்திச்சனையை சேர்ந்த பொதுமக்கள் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை