உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வி.சி.க., செயற்குழு கூட்டம்

 வி.சி.க., செயற்குழு கூட்டம்

தேனி: மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் ரபீக் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், தொகுதிச் செயலாளர் முத்துராமன் முன்னிலை வகித்தனர். தேனி, திண்டுக்கல் மண்டலச் செயலாளர் தமிழ்வாணன், மண்டல துணைச் செயலாளர் சுருளி, தொழிலாளர் விடுதலைமுன்னணியின் மாநில துணைச் செயலாளர்கள் தமிழன், பாஸ்கரன், மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் கோமதி ஆகியோர் பங்கேற்றனர். ஜாதி ஒழிப்பு பேராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தவும், டிச.6ல் மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடக்க உள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேனி நகரச் செயலாளர் ஈஸ்வரன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி