உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கம்பமெட்டு ரோட்டில் வாகனங்கள் வேகத்தை குறைக்க அறிவுறுத்தல்

 கம்பமெட்டு ரோட்டில் வாகனங்கள் வேகத்தை குறைக்க அறிவுறுத்தல்

கம்பம்:கம்பமெட்டு ரோட்டில் மான்கள், காட்டு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அதிகாலை, இரவு நேரங்களில் வாகனங்களின் வேகத்தை குறைத்து செல்ல வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கம்பமெட்டு வனப்பகுதியில் மான்கள், காட்டு பன்றிகள், செந்நாய்கள் கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வன உயிரினங்களான காட்டு பன்றிகள், மான்கள் கூட்டம் கூட்டமாக திரிகிறது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல ரோட்டின் குறுக்கே செல்கிறது. சபரிமலை சீசன் என்பதால் வாகனங்கள் அதிகமாக, கம்பமெட்டு ரோட்டின் வழியாக செல்கின்றன. அதேபோல கேரளாவிற்குள் இருந்து இந்த ரோடு வழியாக கம்பம் வருகின்றனர். குறிப்பாக இரவு மற்றும் அதிகாலையில் மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாகனங்களில் செல்வோர் வேகத்தை குறைத்து செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு மான்குட்டி ஒன்று ரோட்டில் அடிபட்டு கிடந்தது. எனவே வாகன ஒட்டிகள் வனஉயிரினங்களின் நலன் கருதி வாகனங்களை மெதுவாக செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை