உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழை, பனியால் பசுமையான வேலப்பர் கோயில்

மழை, பனியால் பசுமையான வேலப்பர் கோயில்

ஆண்டிபட்டி: கடந்த சில மாதங்களில் பெய்த மழை, தற்போது தொடரும் பனியால் மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலைப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது மாவூற்று வேலப்பர்கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை நீர் கோயிலின் சிறப்பு. இயற்கையான சூழலில் மலைப்பகுதியில் அமைந்த இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதி விழாவில் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்வர். பவுர்ணமி, அமாவாசை, கார்த்திகை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் சுனை நீரில் குளித்து சுவாமி வேலைப்பர் மற்றும் காவல் தெய்வம் கருப்பசுவாமியை வழிபட்டு செல்வர். தற்போது வேலப்பர் கோயில் மலைப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பசுமையின் அழகை ரசித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ