உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழுநோய் கண்டறியும் பணிக்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்

தொழுநோய் கண்டறியும் பணிக்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்

கம்பம்: தொழுநோய் மெல்ல, மெல்ல பரவி வருவதால் இதனை கண்டறியும் பணிக்கென சிறப்பு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.சமீப காலங்களில் தேனி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொழு நோய் தாக்கம் கணிசமாக தெரிய துவங்கி உள்ளது. தொழுநோய் தடுப்பு பிரிவினர் தீவிரமாக கண்காணித்தும் பணியாளர் பற்றாக்குறையால் கண்டறிதலில் தேக்க நிலை ஏற்படுகிறது.கடந்தாண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வீடுகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கி வரும் உலக சுகாதார தன்னார்வலர்களை தொழுநோய் கண்டறிதல் பணிக்கு பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.தொழு நோயை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரிம் லெப்ரே பற்றியும், அது உடலில் பரவும் விதம், உடலில் தோலில், நரம்புகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி பயிற்சியில் விளக்கப்பட்டது.இருந்தபோதும் அவர்களுக்கு வேறு பணிகளும் இருப்பதால், இதில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.எனவே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போன்று சிறப்பு தன்னார்வலர்களை நியமித்து, கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள்நடத்த வேண்டும். வீடுதோறும் சென்று தொழுநோய் பாதிப்பிருக்கிறதா என்பதை கண்டறிந்து, சிகிச்சையை துவக்கிட வேண்டும். இல்லையென்றால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை